Wednesday, August 8, 2007

ஸ்ரீஅருள்மிகு வேல்முருகன் ஆலயம்.

VELMURUGAN GNANAMUNEESWARAR TEMPLE

ஸ்ரீஅருள்மிகு வேல்முருகன்

ஞானமுனீஸ்வரர் ஆலயம்.

செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வருக்கும் அமைப்பட்டிருக்கும்ஆலயம் பலவிதங்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் சிங்கப்பூரில் அமைந்த முதல்ஆலயம் இதுவாகும். நவீன கட்டிட வடிவமைப்பில் பல உன்னதங்களைப் பெற்றுள்ளது. அதே வேளையில்தென்னிந்திய ஆலய சாஸ்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி இது வடிவமைக்கப்
பட்டுள்ளது.

புதிய ஆலயத்தின் அலங்காரக் கலைநயம், சிற்பங்கள், பிரமிக்க வைக்கும் கூடங்கள், சன்னிதிகள் யாவும்மாறுபட்ட கலையழகுடன் அமைக்கப்பெற்றுள்ளன. ஆலயத்தின் கம்பீரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப்பிரதான சன்னிதிக்கு உயரே மாடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இது வழக்கமான கோபுரத்திலிருந்துமாறுபட்டது. மண்டபத்துக்கு வெளியிலும் நடைபாதைகளிலும் காணப்படும் சிற்பங்கள் நம்மை மெய்மறக்க வைப்பவை


நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில், விரைவான மாற்றங்கள் பெற்று வருகின்றன.. பல இன மக்கள்,மக்களின் தேவைக்கு ஏற்ப வீடமைப்பு, சமய வழிபாட்டுத் தலம் போன்றவைகள் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.அதற்கேற்ப அரசாங்கம் வழிமுறைகளை மேற்கொள்கிறது. இந்த நூற்றாண்டில்கோயில் அமைந்த முதல் கோயில் இதுவெனலாம். வேல்முருகன் ஞான முனீஸ்வரர் ஆலயம்இன்றைய சிங்கப்பூர் மக்களின் விருப்பத்தை மனதில் கொண்டு, நமது சமய தேவைகளையும்அதே வேளையில் நாட்டுக்கு அவசியமானவற்றையும் ஈடு செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

ஆலயத்தைச் சுற்றி நவீன அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடங்களுகும் ஒருங்கிணைந்து போகும்வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தை அடுத்து பெளத்த, தாவோ (சீன)ஆலயங்கள் உள்ளன. மற்ற பல இன மக்களுடன் ஒருங்கிணைந்து போகும் போக்கு இது.மற்ற சமயத்தினருடன் நெருக்கமான,இணக்கமான தொடர்பு கொண்டிருப்பது, பல இன ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. பல சமய வழிப்பாட்டு இடங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எண்ணற்ற நன்மைகளும், புரிந்துணர்வும், தொலை நோக்கு எண்ணமும் ஏற்படும்.

ஆலய வரலாறுஸ்ரீ ஞான முனீஸ்வரர்1940- களில் சிலேத்தார், ஜாலான் காயு ஆகிய பகுதிகளில் இந்திய குடியேறிகளாக இருந்தநம்மவர்கள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, ஸ்ரீ கிருஷ்ண பகவான், ஸ்ரீ மாரியம்மனை வழிபட்டு வந்தார்கள்.

தெய்வீக அருள் கொண்ட இக்கோயிலில் வழங்கப்பட்ட பால் பாயசம் பிரதாசம் பலரையும் ஈர்த்தது.அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்குச் சனிக்கிழமை தோறும் சுவை மிகுந்த பால் பாயசம் பிரசாதமாகவழங்கப்பட்டது. பால் அந்த கோயிலுக்குச் சொந்தமான பசுவிடமிருந்து பெறப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. அந்தப் பசு நாள்தோறும் அதிகமான பாலைச் சுரந்ததால் கோயில் தேவைபோக மிஞ்சிய பாலை மற்ற கோயிலுக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ கைலாய கணபதி, ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ முத்து மாரியம்மன்,ஸ்ரீ ஞான முனீஸ்வரர், ஸ்ரீ வீரபத்திரர் ஆகிய சன்னிதிகளும் இருந்தன.அக்கோயில் பக்தர்களுக்குப்பல அபூர்வ அனுபவங்களும், அதிசய சம்பவங்களும், தெய்வ நடமாட்டங்களை கண்டுள்ளனர்.
இரவு நேரங்களில் ஸ்ரீ ஞான முனீஸ்வரர் கையில் அரிவாளுடன், காலில் சலங்கையுடன்சுருட்டு புகைத்தவாறு நடந்து சென்றதைப் பலர் பார்த்துள்ளார்கள். அப்பகுதியில் வாழ்ந்தமக்கள் இன்றும் அத்தெய்வங்களைப் பயபக்தியுடன் வழிபட்டு வருகிறார்கள்.

அருள்மிகு வேல் முருகன்

ஆரம்ப காலங்களில் தஞ்சோங் பகார் துறைமுகப் பகுதியில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வந்தார்.அப்பகுதியிலேயே அமைந்திருந்த மலாயன் இரயில்வே குடியிருப்புகளிலும் தமிழர்கள் அதிகமாக இருந்தனர்.1960 ஆண்டு சீலாட் சாலையில் அருள்மிகு வேல் முருகன் கோயில் கட்டப்பட்டது. அப்பகுதி வாழ்இந்தியருக்கு இந்த அருள்மிகு வேல் முருகன் ஆலயம் சமய வழிபாடு தேவைகளை நிறைவேற்றிவந்தது. பங்குனி உத்திரத்தன்று காவடிகள் தூக்கி தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்திவர்கள்இன்றும் நினைவு கூறுகிறார்கள்.

இந்தக் கோயில்கள் அமைந்திருந்த இடங்கள் நகர மேம்பாட்டிற்கு இடம் கொடுக்க வேண்டிஇருந்ததால் மாற்று இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிய கோயிலாகையால்வருமானமும் குறைவாகவே இருந்தன. பொருளாதாரத்தில் தன்னிறைவு இல்லாத காரணங்களால்புதிய கோயிலை எப்படி கட்டுவது என்று கோவில் நிர்வாகம் கவலை கொண்டது.

ஸ்ரீ ஞான முனீஸ்வரர், அருள்மிகு வேல் முருகன் கோயில்களை நிர்வகித்து வந்த நிர்வாகிகள்புதிய கோவில்கட்டும் வரை விக்கிரங்களுக்கு நிலையான ஒரு வழிபாட்டு இடம் வேண்டும்என்ற விருப்பம் கொண்டிருந்தனர். உட ன் கோயில் கட்ட உகந்த இடமும் கிடைக்கவில்லை.பொருளாதாரமும் இல்லாத காரணத்தால், இடைப்பட்ட காலத்தில் சிராங்கூன் ரோட்டிலுள்ளஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் வளாகத்திலிருந்து செயல் பட எண்ணியர்.கோயிலைக் கட்டபெருமளவில் நிதி சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குடையின்கீழ் வந்தார்கள்.












சிங்கப்பூரில் நிலப்பற்றாக் குறை நிலவிய காரணத்தாலும், சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும்வகையில் ஆலயம் அமைய வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளும் இருந்து வந்தது.வெவ்வேறுவழிபாட்டுப் பாரம்பரியங்களையும் பின்னணி கொண்ட மூன்று கோயில்கள் ஒரே கோயிலாகஇணைந்து ஒரு நிர்வாகத்தின் கீழ், இந்து அறக்கட்டளை வாரியத்தின் உதவியுடன் ஒரேகூரையின் கீழ் கொண்டு வரப்பட்டன.பல்வேறு தடைகளும், சிரமங்களும் இருந்தாலும்நம்பிக்கையும், மனவுறுதியை கைவிடாது செயல் பட்டனர்.

2000- ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து அருள்மிகு வேல்முருகன், முனீஸ்வரர்கோயில்.இப்போது அமைந்துள்ள செங்காங் வட்டாரத்தில் தங்கள் கனவு ஆலயத்தைஎழுப்ப ஆறு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக நிதி திரட்டி நயன்மிகு,கலைமிகு ஆலயம் கட்டினார்கள்.

தமிழில் லட்ச அர்ச்சினை...!

இங்கு தமிழில் இலட்ச அர்ச்சினை மந்திரங்கள் ஓதப்படுகின்றன.சமய நல்லிணக்கதை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பக்கத்தில் அமைந்திருக்கும்பெளத்த மடம், சீன லியோங் சான் ஆலயம் ஆகியவற்றுடன் இணைந்துதெய்வீக தீப ஊர்வலத்தை நடத்தி வருகிறார்கள்.

ஒரு பிள்ளைக்கு நாம் அளிக்கக் கூடிய சிறந்த பரிசு கல்விதான். கல்வி பயணத்திற்குஅடிப்படை பாலர் கல்வி.அருள்மிகு வேல்முருகன் ஞான முனீஸ்வரன் ஆலயம் பாலர்வகுப்புகளைத் தற்போது நடத்தி வருகிறார்கள்.தமிழ் வருடப் பிறப்பு, பஞ்சாங்க வாசிப்பு,பங்குனி உத்திர விழா,சிவராத்திரி, பிரதோஷம், அன்னையர் தினம்,சிங்கப்பூர் தேசிய தினத்தையொட்டி சந்தன குடம் விழா என்றும் இந்து சமயவழிபாடுகளுடன் மற்ற முக்கிய சமய விழாக்களும் ஆலயத்தில் நடந்தேறி வருகின்றன.

VELMURUGAN GNANAMUNEESWARAR TEMPLE,
50, River Vale Cresant,
singapore
Tel 62946739

-சிங்கை கிருஷ்ணன்.

1 comment:

Unknown said...

Callme 9786502950🙏