Thursday, August 2, 2007

ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்


Veeramuthu Muneeswarar Temple


ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்

ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் கோயில் மற்ற ஆலயங்களிலிருந்து சற்று மாறுப்பட்டது.ஹோக் ஹ¤வாட் கெங் [Hock Huat Keng] என்னும் சீனக் கோயிலுள் வாளகத்திலேயேஇருந்து எல்லா வகை பூஜை, வழிபாடுகளை ஏற்று கம்பீரமாக அருள்பாலித்து வருகிறார்.

சீனக் கோயிலில் இந்து சமய வழிபாடா? கேட்பதற்கு புதுமையாகவும், வியப்பாகவும்இருக்கிறது அல்லவா? ஆனால், உண்மை. சிங்கப்பூரில் முதன் முறையாக சீனக் கோயில்வளாகத்தில் இந்து கோவில் ஒன்று வழிபாடு நடத்தி வருகிறது. ஈ சூன் தொழிற் பேட்டையில்ஹோக் ஹ¤வாட் கெங் சீனக்கோவில் வளாகத்திலேயே ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்உள்ளது. பக்தர்கள் தாராளமாக வழிபட ஆலய அதிகாரிகளுடன் சேர்ந்து ஹோக் ஹ¤வாட் கெங்ஆலய அதிகாரிகள் சிறப்பான ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள்.

ஆலய வரலாறு...

நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட இவ்வாலயம் என்றாலும்,1930-ம் ஆண்டிலிருந்து செயல் பட்டுவந்துள்ள ஆதார சான்றுகள் உள்ளன.சிங்கப்பூரில் ‘கம்போங்’ (கிராமம்) எனக்கூறப்படும் இயோ சூச் காங்,சாலையில் அமைந்துள்ள டிரக்.32 (Track.32)-யில் சிறிய மண் குன்றின் மீது ஒரு கருங்கல்லைஸ்தாபம் செய்து அதற்கு ‘’வீரமுத்து முனீஸ்வரன்’’என்று பெயரிட்டு வழிபட்டனர்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் செடிகொடிகளுடன், காடுகளும், புதர்களும் நிறைந்த இடமாகஇருந்தாலும் மக்கள் அங்கு குடியிருந்தனர். இந்தியர்களில் பெரும்பாலும் உடல் உழைப்புத்தொழிலாளர்களாக இங்கு குடியிருந்தனர். பொது மராமத்து (PWD) இலாக்காவின் (குவாட்டர்ஸ்)குடியிருப்பும் இருந்தது. பெரும்பாலும் இந்தியர்களாக இருந்த காரணத்தால் தங்கள் வழிபாட்டுக்குஒரு இடத்தினைத் தேர்தெடுத்தார்கள். அவ்விடம் ஹோக் ஹ¤வாட் கெங் சீனக் கோவில்அருகாமையிலேயே அமையப்பெற்றது.

இப்பகுதி பெரும் காடாக விளங்கியதால் புலிகளின் நடமாட்டமும் இருந்தது. இந்த புலிகள்அடிக்கடி ஹோக் ஹ¤வாட் கெங் சீனக் கோவிலுக்கு வந்து ஓய்வு எடுப்பதாகவும் கூறப்படுகிறது.ஆனால் புலிகளால் எந்த தீங்கும் ஏற்பட்டதில்லை. இதனை நம்மவர்கள் முனீஸ்வராகவும், சீனர்கள்இதனைத் தங்கள் தெய்வீக வாரிசு என கருதி ஹோக் ஹ¤வாட் கெங் சீனக் கோவிலில்‘துவா பேக் கொங்’ என்ற சீனத் தெய்வத்துடன் புலியின் சிலையையும் வைத்து வழிப்பட்டனர்.
காலவோட்டத்தில் புலிகளின் நடமாட்டம் குறைந்தாலும், புலியின் உறுதல் சப்தத்தினையும்,முனீஸ்வரனின் நிழலுருவையும் சில பக்தர்கள் கேட்டும், பார்த்தும் உள்ளார்கள்.

கடந்த காலத்தில் பொத்தோங் பாசீர் வட்டாரத்தில் ஒரு பெரிய புளிய மரத்தடியின் கீழ்முனீஸ்வரனை வைத்து சிலர் வணங்கி வந்தனர். நகர சீரமைப்பின் காரணமாக அரசாங்கம்அந்நிலத்தினைக் கையப்படுத்தவே திரு. குரும்பையா என்பார் தலைமையில் அக்கோயில்தொண்டர்கள் இக்கோயிலுடன் இணைந்து இந்நாள் வரை சேவையாற்றி வருகிறார்கள்.

நகர விரிவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் இயோ சூச் காங், சாலையிலிருந்து புதியஇடத்திற்கு ஆலயம் மாற வேண்டி கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, நம்மவர்கள் போல் அவர்களும்வழிபடும் தெய்வத்தை அணுகி இடம் பெயர அனுமதி வேண்டி அருள் வாக்கு கேட்டுள்ளனர்.‘என் அண்ணன் முனீஸ்வரன் வந்தால்தான் நானும் வருவேன்’ என்ற செய்தி அவர்களுக்குவியப்பை அளித்தது.நகர விரிவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் இயோ சூச் காங், சாலையிலிருந்து புதியஇடத்திற்கு ஆலயம் மாற வேண்டி கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, நம்மவர்கள் போல் அவர்களும்வழிபடும் தெய்வத்தை அணுகி இடம் பெயர அனுமதி வேண்டி அருள் வாக்கு கேட்டுள்ளனர்.‘என் அண்ணன் முனீஸ்வரன் வந்தால்தான் நானும் வருவேன்’ என்ற செய்தி அவர்களுக்குவியப்பை அளித்தது.

ஹோக் ஹ¤வாட் கெங்[Hock Huat Keng] சீனக்கோவில் நிருவாகத்தினர்£ரமுத்து முனீஸ்வரனை அணுகி விபரம் கூற, நம்மவர் முனீஸ்வரனும் சம்மதித்தார்.

அதன்படி 1998 ஆண்டு புதிய ஈ சூன் தொழிற் பேட்டை வட்டாரத்திற்கு இருவரையும்அழைந்துச் செல்ல ஏற்பாடு ஆகியது. நாளும், நேரமும் குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட நாளில்இரவு எட்டு மணிக்கு இருவரும் புறப்பட காலையிலிருந்து ஏற்பாட்டு பணித் தொடங்கியது.காலை பத்து மணிக்கு பதித்த முனீஸ்வரனுக்குரிய வேலை எடுக்க கீழிருந்த சிமெண்ட்மேடைடை உளியால் உடைக்க ஆரம்பித்தனர்கள் தொண்டர்கள். மதியம் வரை, மாலைவரை, இரவு வரை உடைக்கவே முடியவில்லை.

நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. இரவு எட்டாகிவிட்டது.மூனீஸ்வரனின் வேல் நகரவில்லை.

இதற்குள் ஹோக் ஹ¤வாட் கெங்[Hock Huat Keng] சீன ஆலயத்தார்கள்புறப்பட தயாராகிவிட்டார்கள்.இறுகியாக ‘துவா பேக் கொங்’ சிலையை மட்டும் வாகனத்தில் தூக்கி வைக்க வேண்டியதுதான் பாக்கி. ஆனால், நம்மவர்முனீஸ்வரன் நகரவில்லை.

பொறுத்து பார்த்த ஹோக் ஹ¤வாட் கெங் சீன ஆலயத்தார்கள் நேரம் கடந்துபோவதை எண்ணி, வருவது வரட்டும் என்று ‘துவா பேக் கொங்’ சிலையை வாகனத்தில்ஏற்றி விட்டார்கள். அந்த சமயம், முனீஸ்வரனுக்கு பூஜை செய்து வரும் பூசாரி மனமாரவேண்டி ஒரு எலுமிச்சை வெட்டி காணிக்கையாக செலுத்தினார்.

வேண்டுதல் வேண்டி நின்ற சமயமும், ‘துவா பேக் கொங்'சிலையையும் வாகனத்தில் ஏற்றி சமயமும் ஒரே நேரம்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ததது. காலையிலிருந்து நகர மறுத்த முனீஸ்வரன்,தனது தம்பி ‘துவா பேக் கொங்' வாகனத்தில் ஏற்றியவுடன், ஒருகைக் கொண்டு வேலைபிடுங்கியவுடன். பூசாரி கையோடு லவகமாக வேல் வந்துவிட்டது.

நள்ளிரவில் புதிய ஆலயம் வந்து சேர்ந்தனர். ஹோக் ஹ¤வாட் கெங் சீனக்கோவில்[Hock Huat Keng] வளாகத்திலேயே சுமார் 100 சதுர அடி நிலத்தில் வீரமுத்து முனீஸ்வரர்க்குஒரு தனி இடம் கொடுக்கப்பட்டது. ஒரே இடத்தில் இருந்து அருள் பாலித்த காரணத்தால்முனீஸ்வரனைத் தனியாக விட்டுவிடாமல் தன்னோடு இணைத்து ஹோக் ஹ¤வாட் கெங்இருப்பது குறிப்பிடத்தக்கது.[ மனிதனுக்குள் இருக்கும் வேற்றுமை, தெய்வங்களுக்கிடையில் இல்லை என்பதற்கு இதுஒரு உதாரணம்]

சமய நல்லிணக்கம்.....

வீரமுத்து முனிஸ்வரருக்கும் மற்ற இந்து தெய்வங்களுக்கும் பல திருவிழாக்கள் இருந்தாலும்,இங்கு சனவரி முதல் நாள் காணிக்கை செலுத்தி வீரமுத்து முனீஸ்வரரை விமர்சியாகக்கொண்டாடி வருகிறார்கள். திருவிழா ஏற்பாடுகளைச் சீனக் குழு உறுப்பினர்களும் ஏற்று நடத்திவருகிறார்கள். இங்கே காணிக்கை செலுத்தும் பக்தர்கள் காவடி சுமப்பதில்லை.சீன ஆலயத்தில்பொதுவாக நீண்ட அலகுகள் குத்திக் கொள்ளூம் வழக்கம் இருப்பதால், நம்மவர்களும் நீண்டஅலகுகள் குத்தி காவடி எடுக்கிறார்கள்.

சீன ஆலயத்தில் இந்தியர்கள் என்பதால் சீன கலாசாரத்தை அறிந்து கொள்வது மட்டுமல்ல,அதைப் பக்தர்களும் அறிந்து கொள்ள முடிகிறது. சீனத் தெய்வங்களின் பெயர்களின் அனைத்தும்இப்போது மனதில் பதிந்துவிட்டது என்று கூறும் மேலாண்மை குழு சீன பக்தர்களும் நம் கலாச்சாரங்களைநன்கு அறிந்து வைத்துள்ளனர்.

இவ்வாலயத்தில் இந்திய பக்தர்களுடன் சீன பக்தர்களும் பால்குடங்கள் எடுப்பதும், அலகு காவடிஎடுத்து முனீஸ்வரன் சந்நிதிக்கு வருவதைக் காணலாம். சீன ஆலயத்தின் மேலாண்மை குழுத்தலைவர்திரு. ஜிம்மி இங்கிடம் கேட்ட போது ‘நாங்கள் மட்டுமல்ல எங்கள் தெய்வங்களும் சிறு வயது முதல்நண்பர்கள் என்று கூறுகிறார்.

இந்த ஆலயத்தின் பல இன சமுதாய வழிபாடு ஒற்றுமை உணர்வுதான் உயர்ந்திருக்கிறது!சீனர்கள் ஆலயத்தில் இந்து கடவுள் இருப்பதால் நமது இந்திய கலாச்சாரமும் இங்கே பின்பற்றப்படுகிறது. நன்னீராட்டு விழாவின் போது இந்துப் பக்தர்கள் பலர் முனீஸ்வரரின் தரிசனத்தைப்பெற்றுக் கொண்டு சீனக்கோவிலில் ஊதுவத்தி ஏற்றி வைத்தனர். சீனர்களும் வரிசை பிடித்து நின்றுமுனீஸ்வரரின் தரிசனத்தைப் பெறுகிறார்கள்.

சிங்கப்பூரில் பல இன மக்களிடையே இந்துக்களும் சீனர்களும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில்வழிபடுவது சிங்கப்பூரர்களின் தெய்வீக புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் பிரதிபலிக்கிறது.சிங்கப்பூரர்களின் புரிந்துணர்வுக்கும் ஒற்றுமைக்கும் இந்த கூட்டுக் கோவில் வழிபாடு ஒரு சிறந்தஉதாரணம் என்று கூறுகிறார் ஆலயத்தலைவர் திரு.சுகுமாறன்.

இரு ஆலயத்தில் பல இன சமுதாயத்தினர் வழிபடும் தெய்வங்கள் உண்டு என்பது ஒருபுறமிருந்தாலும்அந்த இரு ஆலயங்களிலும் சீனக் குழந்தைகளும் இந்திய குழந்தைகளும் ஒன்றாக வழிபாடுகள் செய்வதும்ஓடியாடித் திரிவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. நாட்டின் உறுதி மொழியை மனதில் தக்க வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த இரு ஆலயங்கள்.

ஆலய மேலாண்மை குழுவிலிருக்கும் இருக்கும் திரு.சுகுமாரன், திரு.ராஜாவின் கனிவானபேச்சும், சேவையும் ஆலய மேம்பாட்டிற்கு ஒரு மைல் கல்.

வீரமுத்து முனீஸ்வரர் ஆலயம் சிறியதுதான். ஆனால், அதன் அருள் வீச்சு நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. திரு. சுகுமாரனை பேட்டி காண நான் வீரமுத்து முனீஸ்வரர் சென்ற போது,மூனீஸ்வரன் சன்னிதானத்தில் நின்றபோது சில நிமிடங்கள் வீரமுத்து முனீஸ்வரர் அருளொளிஎன்னை சுற்றி நின்றது. அந்த அருளொளி வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

வீரமுத்து முனீஸ்வரர் ஆலயத்தில் ஒரே சன்னிதி. அதில் வீரமுத்து முனீஸ்வரர் கம்பீரமாகவீற்றிருக்கிறார் நின்ற கோலத்தில். வலது கையில் அரிவாள், இடது கையில் சூலம்- அருகில்இடது பக்கம் விநாயகர், வலது புறத்தில் அம்பாள் என பரிபாலம் செய்கிறார்.
சிறிய ஆலயம் என்றாலும், பக்தர் கூட்டம் அதிகம். வெள்ளீ,செவ்வாய் கிழமைகளில்108 எலுமிச்சை மாலை, மலர் மாலை என்று நம்மை பரவப்படுத்துகிறது. இந்தியர்கள்மட்டுமில்லை, சீனர்கள், இஸ்லாம் அன்பர்கள் சிலரும் பக்தி பரவசத்துடன் மெய்மறந்து,கண்மூடி நிற்பதைக் காண்லாம்.

தூய்மையான பராமரிப்பு, அமைதியான சூழ்நிலை,கனிவான வரவேற்பு இந்த நினைவோடுவிடைபெறலாம்.


Veera Muthu Muneeswaran Temple

(Hock Huat Keng Temple)

523 Yishun Industrial Park. A

Singapore. 768 7709459

7172 9190 7143 9028 2576

1 comment:

Earn Staying Home said...

நன்றாக இருக்கிறது